அபிவிருத்திக்குழு தலைவர்களின் செயற்பாடுகளை உதாசீனப்படுத்தி செயற்படமுடியாது : சதாசிவம் வியாழேந்திரன்
ஜனாதிபதியினால் மாவட்ட பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதானது பிரதேச மற்றும் மாவட்ட ரீதியான அபிவிருத்திகளையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகும். அதனை நிர்வாகத்தினர் உதாசீனப்படுத்தி செயற்படமுடியாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் இன்று (06.02.2024) நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்திக்குழு கூட்டம்
குறித்த கூட்டத்தில் கடந்த ஆண்டு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பரிவில் சுமார் 139 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் பிரதேச அபிவிருத்திக்கூட்டங்கள் நடைபெறும்போது திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேசத்தில் உள்ள மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் கூட்டத்திற்கு வரவேண்டும் என்பதற்காக எந்த அதிகாரிகளும் வரமுடியாது எனவும் இதன்போது அதிகாரிகளுக்கான பணிப்புரைகளும் இராஜாங்க அமைச்சரினால் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வும் காணப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தனபாசுந்தரத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திணைக்களங்களின் தலைவர்கள்,திணைக்களங்களின் முக்கியஸ்தர்கள்,பொலிஸ் மற்றும் ஏனைய திணைக்களங்களின் உயரதிகளாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
