மட்டக்களப்பில் என்.பி.பி அமைப்பாளரின் அராஜகம் : கைது செய்து பிணையில் செல்ல அனுமதி!
மட்டக்களப்பு (Batticaloa) களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றில் அராஜகத்தில் ஈடுபட்டு ஆசிரியரை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலை கட்டடத்தை மாற்ற வேண்டும் என கோரி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் அலெக்ஸ் என்பவர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதன்போது பாலர் பாடசாலை ஆசிரியை தாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த அமைப்பாளரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவரை நீதவான் பிணையில் செல்ல அனுமதி அளித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் இருந்து வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான அலெக்ஸ், பட்டிருப்பு தொகுதியின் களுவாஞ்சிக்குடியில் உள்ள பிரதேச சபை, பிரதேச செயலகம், வைத்தியசாலை, அரச நிறுவனங்கள் மற்றும் நிர்வாகங்களில் தன்னிச்சையாக தலையிட்டு குழப்பங்களை உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்குள்ள மக்களுடன் மதுபோதையில் அராஜகத்திலும் ஈடுபட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்னாள் இராணுவ வீரரிடம் பெண் மருத்துவரின் மோசமான புகைப்படங்கள்: 72 மணித்தியாலங்களில் நடந்தது என்ன..!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |