பதவியேற்று சில நாட்களில் மரணமடைந்த மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர்
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளரும் தமிழ் தேசிய பற்றாளருமான மாணிக்கராஜா இன்று(7) சுகவீனம் காரணமாக மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளராக பதவியேற்று 27தினங்களே நிறைவடைந்துள்ள நிலையில் அவர் மரணமாகியுள்ளார்.
தவிசாளர் மரணம்
இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனைப்பற்று கிளையின் தலைவராகவும் மண்முனைப்பற்றின் தவிசாளராகவுள்ள மாணிக்கராஜா ஆரையம்பதி பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.
தொழிலதிபராகவுள்ள அவர் மண்முனைப்பற்றில் கடந்த காலத்தில் ஆயுதக்குழுக்களின் அட்டகாசத்திற்கு மத்தியிலும் தமிழ் தேசியம் சார்ந்த செயற்பாட்டளராக இருந்துவருகின்றார்.
சுகவீனம் காணரமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
