வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று(23.07.2025) வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற, விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்த மண்டபம் பூஜை நடைபெற்றதை தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் மாமாங்கேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அருள் பாலித்தார்.
கடந்த 15 ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன், ஆரம்பமாகிய இப் பெருவிழாவின் 09 ஆம் நாள் புதன்கிழமை இரதோற்சவம் இடம்பெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று, இராம பிரானால் வழிபட்டதாக கூறப்படும், வரலாற்றை தொன்மையும், புகழும் மிக்க இவ்ஆலயத்தின் ஆடி அமாவாசை தினமான வியாழக்கிழமை(24.07.2025) தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.































ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 20 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
