மட்டக்களப்பு பெரியகல்லாறு கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் இலங்கையின் முதல் கடல்நாச்சியம்மன் ஆலயம் என்ற பெருமையினையும் கொண்ட மட்டக்களப்பு பெரியகல்லாறு கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஒரு நாள் திருச்சடங்கு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (28) அதிகாலை நடைபெற்ற நிகழ்வுடன் நிறைவுபெற்றுள்ளது.
பல நூற்றாண்டு பழமையான குறித்த ஆலயமானது கிழக்கிலங்கையின் தனித்துவமிக்க பாரம்பரிய சடங்கு முறைகளைக்கொண்டதாக ஒரு நாள் திருச்சடங்காகவும் நடைபெற்றுவருகின்றது.
வழிபாடுகள்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பண்டைய கால முறைகளுக்கு அமைவாக பறவைக்காவடிகள் மற்றும் காவடிகள் சகிதம் ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பூரச்சட்டி ஏந்தி வர பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து அம்மன் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற்று ஆலயத்தின் முக்கிய திருச்சடங்கான பூரணகும்பம் நிறுத்தும் நிகழ்வு நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
வருடாந்த திருச்சடங்கில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர்
கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.