மட்டக்களப்பு கட்டுப்பிள்ளையார் ஆலய மஹோற்சவ பெருவிழா
மட்டக்களப்பு - செட்டிபாளையம் கட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மஹோற்சவ பெருவிழாவின் தேரோட்ட திருவிழா பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சசையாக இடம்பெற்றுள்ளது.
குறித்த திருவிழா நேற்று(21.08.2024) இடம்பெற்றுள்ளது.
சிவாச்சாரியார்களின் மந்திர உச்சாடனத்துடன் பூ மழை பொழிய பக்தர்களின் அரோகரா கோசத்தோடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரேறி வலம் வந்து அடியார்களுக்கு கட்டுப்பிள்ளையார் அருள்பாளித்துள்ளார்.
மஹோற்சவம்
கட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான மஹோற்சவம் கடந்த 12ஆம்
திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று பின்னர் படர் சப்பரத் திருவிழா இடம்பெற்றதுடன் நேற்று இரதோற்சவம் இடம்பெற்றதுடன் வியாழக்கிழமை(22.08.2024) நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் 2024ம் ஆண்டுக்கான மஹோற்சவம் வெகு சிறப்பாக நிறைவு பெற்றது.
மஹோற்சவ திருவிழாவானது ஆலய தர்மகர்த்தாவும் ஆலய பிரதமகுருவுமாகிய கிரியா திலகம், ஜோதிட திலகம், வாமதேவசிவாச்சாரியார் சிவஸ் ஸ்ரீ நா.குணகேந்திரன் குருக்கள் அவர்களின் தலைமையிலான குருமார்களினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 21 மணி நேரம் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
