மட்டக்களப்பு சந்திவெளி துப்பாக்கி சூடு: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
மட்டக்களப்பு சந்திவெளியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் 4 பேருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மட்டக்களப்பு சந்திவெளியில் 2017ஆம் ஆண்டு ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று வெள்ளிக்கிழமை (21) மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை ரி56 ரக துப்பாக்கியால் அந்தபகுதியில் இயங்கிவந்த ஆயுதகுழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மரண தண்டனை
இந்தச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி.கிருஸ்ணரூபன், வ.திருச்செல்வம், கு.பாஸ்கரன், க.மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த 4 பேரும் குற்றவாளிகள் என கண்டுகொண்டதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி பட கூட்டணி.. வைரல் போட்டோ Cineulagam

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
