மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று மூன்றாவது தினமாகவும் நடைபெற்றுள்ளது.
இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே கொண்ட ஆலயம் என பல்வேறு சிறப்புகளை கொண்ட மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 02ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்
இதனை முன்னிட்டு கடந்த 23ஆம் திகதி கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 26ஆம் திகதி தொடக்கம் அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.
தற்போது நடைபெற்றுவரும் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வானது எதிர்வரும் 01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 06மணி வரையில் நடைபெறவுள்ளதுடன் இரவு பகலாக பக்தர்கள் எண்ணெய்காப்பு சாத்தும் வகையிலான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.
எதிர்வரும் புதன்கிழமை காலை ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
முற்பகல் 11.05 தொடக்கம் 11.55மணி வரையில் உள்ள ஆனி உத்தரமும் அமிர்தசித்தயோகமும் கூடிய கன்னி லக்ன சுபமுகூர்த்தவேளையில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.











ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 19 மணி நேரம் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
