மட்டக்களப்பில் வைத்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அதிகாரிகளுக்கு விடுத்த பணிப்புரை
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுக்கான இந்த ஆண்டு 733 திட்டங்களுக்கு 9739 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட திட்டமிடல் கூட்டம் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுது. மட்டக்கப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துநெத்தி கலந்துகொண்டார்.
இதன்போது மத்திய அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீடுகள் மாகாணசபையினால் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள்,வெளிநாட்டு நிதிகள் என பல்வேறு நிதி திட்டங்கள் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டது.

முக்கியமாக முந்தனையாறு திட்டம் மற்றும் கிரான்புலிபாய்ந்தகல் வீதியுடான பாலம் அமைத்தல் உட்பட மாவட்டத்தில் துறைசார்ந்து முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் எதிர்கொண்ட பாதிப்புகள் குறித்தும் அதற்கான தீர்வினையும் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய திட்டங்கள் குறித்தும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் தமது அறுவடை செய்த நெல்லை காயவைப்பதற்கு எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்தி காயப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் நெல் காயவைக்கும் இயந்திரங்களையும் களஞ்சிய சாலைகளை அமைப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.
அத்துடன் கடந்த சில காலங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அனுமதி பத்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளதனால் மண் விலை அதிகரித்துள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மண் தொடர்பிலான தீர்மானங்களை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதுடன் இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை முன்னெடுக்கவேண்டும் என்ற பணிப்புரைகள் விடுக்கப்பட்டதுடன் அதற்கு தேவையான உதவிகளை அமைச்சின் ஊடாக வழங்கவும் வாகன தேவைகளை பிரதேசசபைகள் ஊடாகவும் வாடகை அடிப்படையிலும் பெற்றுக்கொள்ளும் வகையில் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
இதன்போது மாவட்டத்தில் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதன் காரணமாக திட்டங்களை விரைவுபடுத்தி முடிவுக்குமாறு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரினால் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தின் நிறைவில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துநெத்தியினால் ஊடக சந்திப்பு ஒன்றும் நடாத்தப்பட்டது.
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam