குருமண்வெளி - மண்டூர் படகுப்பாதைப் போக்குவரத்து கட்டணம் அறவீடு: மக்கள் விசனம் (Video)

Batticaloa Sri Lanka
By Rusath Apr 15, 2023 08:19 PM GMT
Report

மட்டக்களப்பு- படுவாங்கரைக்கும் எழுவாங்கரைப் பகுதியையும் ஊடறுத்துச் செல்வதே இலங்கையின் மிக இரண்டாவது மிக நீளமான வாவியாகக் கருதப்படும் மட்டக்களப்பு வாவியாகும்.

இவ்வாவியைக் கடந்தே இருபகுதிக்குமான போக்குவரத்து மார்க்கங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதில் பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாகக் கருதப்படுவது குருமண்வெளி - மண்டூர் படகுப்பாதைப் போக்குவரத்தாகும்.


இதுவரைகாலமும் எதுவித கொடுப்பனவுகளையும் செலுத்தாமலேயே அப்பாதையினூடாக பிரயாணிகள் தமது போக்குவரத்துக்களை மேற்கொண்டு வந்துள்ளனர்.

குருமண்வெளி - மண்டூர் படகுப்பாதைப் போக்குவரத்து கட்டணம் அறவீடு: மக்கள் விசனம் (Video) | Batticaloa Boat Transport

படகுப்பாதைப் போக்குவரத்திற்கு கட்டணம் அறவீடு 

எனினும் கடந்த 01.04.2023 அன்றிலிருந்து இப்படகுப்பாதையில் போக்குவரத்துச் செய்யும் பயணிகளிடம் கட்டணம் அறவிடப்படும் என கட்டண விபரங்கள் அடங்கிய பாதாகை ஒன்று வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் எந்திரி.ஏ.எம்.றிஸ்வினால் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததையடுத்து. கடந்த முதலாம் திகதி நிதி வசூலிப்பது நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் நேற்று (15.04.2023) அப்படகுப் பாதையில் பயணம் செய்யும் பயணிகளிடம் கட்டணம் அறவீடு செய்யப்படுவதாக குறித்த பதாகையில் திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, கட்டணம் வசூலிப்பதற்குரிய பற்றுச் சீட்டுக்களுடன் பொறியியலாளர்கள், மற்றும், மற்றும் நிதி அறவீடு செய்யும் உத்தியோகஸ்த்தர்களும் திடீரென வருகை தந்து படகுப்பாதையில் கட்டணம் அறவீடு செய்த பின்னர் பாதையில் பயணம் செய்வதற்கு அனுமதித்துள்ளனர். 

இதற்கு அப்பகுதி மக்கள் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். 

இதனால் குறித்த போக்குவரத்து மார்க்கத்தில் ஈடுபடும் 2 படகுகளும், முற்பகல் 11.30 மணிவரையில் வேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

குருமண்வெளி - மண்டூர் படகுப்பாதைப் போக்குவரத்து கட்டணம் அறவீடு: மக்கள் விசனம் (Video) | Batticaloa Boat Transport

மக்கள் விசனம் 

தாம் இதுவரையில் எதுவித கட்டணங்களும் செலுத்தாமலேயேதான தமது போக்குவரத்துக்களை மேற்கொண்டு வந்ததாகவும், இன்றிலிருந்து நிதி அறவீடு செய்யும் நடைமுறையை வீதி அபிவிருத்தி திணைக்களம் கைவிட வேண்டும் எனவும், இதற்கு தாம் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் பயணிகளும், பொதுமக்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

எனினும் தமக்கு மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின் பெயரிலேயே கட்டணம்  அறவீடு செய்வதாக அவ்விடத்திலிருந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர் ஒருவரும், நிதி வசூலிப்பில் ஈடுபட்ட உத்தியோகஸ்த்தர்களும், தெரிவித்துள்ளனர். 

பின்னர் அவ்விடத்திற்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரயாணிகளுடனும், பொதுமக்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளனர். 

பொதுமக்களுக்கு அமைதியான முறையில் தமது உரிமைகளைக் கேட்பதற்கு உரிமையுள்ளது. ஆனால் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களைத் தடுப்பதற்கு யாருக்கும் அனுமதியில்லை, கட்டணம் அறவீடு செய்வதை தடை செய்ய வேண்டுமாக இருந்தால் உரிய அதிகாரிகளுக்கு மக்கள் எழுத்து மூலமாக விண்ணப்பங்களை வழங்க முடியும்.

எனவே மக்கள் குறித்த பாதையில் போக்குவரத்துச் செய்வதக்கு யாரும் தடை ஏற்படுத்த முடியாது என தெரிவித்து படகு சேவையை தொடருமாறு தெரிவித்ததற்கிணங்க , மக்களின் எதிர்பதையும் மீறி பற்றுச் சீட்டு வழங்கி கட்டணம் வசூலித்த பின்னர் மக்கள் குறித்த பாதையில் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குருமண்வெளி - மண்டூர் படகுப்பாதைப் போக்குவரத்து கட்டணம் அறவீடு: மக்கள் விசனம் (Video) | Batticaloa Boat Transport

கட்டண விபரங்கள் 

12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 10 ரூபா, துவிச்சக்கர வண்டியுடன் பயணிப்பவர்களுக்கு 30 ரூபா, மோட்டார் வண்டியுடன் பயணிப்பவர்களுக்கு 50 ரூபா, முச்சக்கர வண்டியுடன் பயணிப்பவர்களக்கு 100 ரூபா, கார், வான், பிக்கப் வாகனத்துடன் பயணிப்பவர்களுக்கு 250 ரூபாவும் அறவீடு செய்யப்படுவதுடன், சீருடையுடன் வரும் பாடசாலை மாணவர்களுக்கும், அரச வாகனங்களுக்கும் இலவசமாகவும் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருமண்வெளி – மண்டூர் ஓடத்துறைக்கு நிரந்தர பாலம் அமைப்பதற்காக வேண்டி கடந்த காலங்களில் பல தடவைகள் அடிக்கல் நடப்பட்ட நிலையிலும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளமை  குறிப்பிடத்தக்கதாகும். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US