மட்டக்களப்பில் கறுப்பு யூலை படுகொலை செம்மணி புதைகுழி சர்வதேச நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்
கறுப்பு யூலை பேரவலத்தை நினைவுகூர்ந்தும் மற்றும் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு செம்மணி புதைகுழிக்கும் சர்வதேச நீதிவேண்டி மட்டக்களப்பில் ஆர்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது, நேற்று (28) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்த இந்த கவனயீர்பு ஆர்பாட்டத்தில் கிறிஸ்தவ குருமார்கள் காணாமல் போன உறவுகளின் சங்கத்தினர் கலந்துகொண்டுள்ளனர்.
நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்
கறுப்பு யூலை சிறிலங்காக அரச பயங்கரவாதத்தின் கொடூரம், செம்மணி புதை குழிக்கு சர்வதேச நீதி வேண்டும், தமிழ் தாயகத்தில் இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும், போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.





நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
