வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் வருடாந்த சக்தி பெருவிழா
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி பெருவிழா நேற்றையதினம்(8) தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றுள்ளது.
இலங்கையின் மதுரை மீனாட்சி ஆலயம் என்ற சிறப்பினைப்பெற்ற பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி பெருவிழா கடந்த 27ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் பெருவிழா ஆரம்பமானது.
விசேட பூஜைகள்
10தினங்கள் ஆலயத்தில் சக்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றதுடன் ஆலயத்தின் சிறப்பு சடங்கான வீரகம்பம் வெட்டும் நிகழ்வு வாழைக்காய் எழுந்தருளும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை சக்தி மகா யாகம்,நோர்ப்புக்கட்டுதல்,கங்கை நீராடல்,ஊர்காவல் போன்றன நடைபெற்றது.
இன்று காலை அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தீக்குளி காவல்,பூஜைகள் நடைபெற்று தேவாதிகளுடன் ஆயிரக்கணக்கான அடியார்கள் தீமிதிப்பில் கலந்துகொண்டனர்.
தீமிதிப்பினை தொடர்ந்து சாட்டைச்சடங்கு மற்றும் தேவாதிகள் வாக்குச்சொல்லும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஆயுத பூஜையும் நடைபெற்றது.











தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

பிக் பாஸ் 9 முதல் எலிமினேஷன் இவர்தானா.. Voting-ல் அதிகம் வாக்குகள் பெறுவது யார் தெரியுமா? Cineulagam
