படலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழு
படலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. நான்கு பேரைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட மேலதிக சொலிசுட்டர் ஜெனரல் ரொஹான்த அபேசூரியவின் தலைமையில் இந்தக் குழு செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி சொலிசுட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அரசாங்க சிரேஸ்ட சட்டத்தரணி ஜயனி வேகடபொல மற்றும் அரச சட்டத்தரணி சக்தி ஜயகொடராச்சி ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
படலந்த குழு அறிக்கையின் சாட்சியங்கள் ஊடாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என இந்த குழு ஆராய உள்ளது.
மேலும் தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இந்த குழு கவனம் செலுத்த உள்ளது.
88-90ம் ஆண்டுகளில் படலந்த வீதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சித்திரவதை மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் படலந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
