மின்சார கட்டணத்தை அதிகரிக்க மறுப்பு தெரிவித்த பசில் ராஜபக்ச - சம்பிக்க எம்.பி தகவல்

Colombo Basil Rajapaksa Champika Ranawaka Sri Lanka Economic Crisis Ceylon Electricity Board
By Murali Aug 17, 2022 10:27 PM GMT
Report

2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் தவறியதன் காரணமாக இலங்கை மின்சார சபை பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரணவக்க, தேர்தல் தோல்விக்கு பயந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பல சந்தர்ப்பங்களில் கட்டண உயர்வை எதிர்த்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதில் பசில் ராஜபக்ச கவனம் செலுத்தியதாகவும் அதனால் கட்டணத்தை அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணத்தை அதிகரிக்க மறுப்பு தெரிவித்த பசில் ராஜபக்ச - சம்பிக்க எம்.பி தகவல் | Basil Refused Increasing Electricity Tariffs

தேர்தல் வெற்றியில் கவனம் செலுத்திய பசில்

பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றியில் கவனம் செலுத்தியதாகவும், உத்தேச மின்சார கட்டண உயர்வை எதிர்த்து பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரணவக்க குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் பசில் ராஜபக்ச தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 2015ம் ஆண்டு தாம் அமைச்சராக பதவியேற்றதும் 45 மில்லியன் ரூபா நட்டத்தில் இருந்த இலங்கை மின்சார சபையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபைக்கு தொழில்சார் நிபுணர்கள் மற்றும் நிபுணர்களை நியமித்ததாகவும் அவர் கூறினார். அரசாங்கம் பொருளாதார எரிமலையில் நிலைகொண்டிருப்பது பசில் ராஜபக்ச தலைமையிலான நிர்வாகத்திற்கு தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரணவக்க தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணத்தை அதிகரிக்க மறுப்பு தெரிவித்த பசில் ராஜபக்ச - சம்பிக்க எம்.பி தகவல் | Basil Refused Increasing Electricity Tariffs

கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

இதேவேளை, அரச நிறுவனங்களின் மின்சார கட்டணத்தை உரிய நேரத்தில் அறவிடுவதற்கான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து இலங்கை மின்சார சபை பாரியளவிலான கடன்களை பெற்றுள்ளதால், ஏனைய அரச நிறுவனங்களிடமிருந்து நிலுவைகளை கடுமையாகப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் மின்சார பாவனையை குறைப்பதற்கும், உரிய காலத்தில் செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்துவதற்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கடுமையான நடவடிக்கைகள் இல்லாமல் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US