தேர்தல் குறித்து பசிலிடம் ரணில் நேரடியாக கூறியது என்ன..!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட உள்ளதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நாடாத்துவது குறித்து பசில் தரப்பினர் கூடுதல் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் கூட்டணி ஒன்றின் ஊடாக தாம் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க உள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலைக் கோரும் பசில்
எனினும், நாட்டை பற்றியும் அரசியல் கட்சிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டுமாயின் முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென பசில் ராஜபக்ச கூறியதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் மக்கள் ஜனாதிபதி தேர்தலை கோருவதாகவும், வீழ்ந்திருந்த நாட்டை தாமே மீட்டதாகவும் இதனால் மக்கள் தம்மை நிராகரிக்க வாய்ப்பில்லை என நம்புவதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |