பசிலை இலங்கைக்கு அழைத்து வருவதில் நாமலுக்கு காத்திருக்கும் சவால்! நாட்டுக்கு திரும்பியவுடன் கைது..
பசில் ராஜபக்சவை முடியுமாக இருந்தால் மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு, பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசியபோது அவர் குறித்த சவாலை விடுத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சமீபத்திய நீதிமன்ற நிகழ்வுகள் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. பசில் ராஜபக்சவின் மோசடி சொத்துக்குவிப்பு தொடர்பில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..
பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை
எனவே முடிந்தால் 'பசில் ராஜபக்சவை நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வாருங்கள்' என்று ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சவால் விடுக்கின்றேன்.
கடந்த காலஙகளில் ராஜபக்சக்கள் மீது எவ்வகையான பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அவற்றைப் பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை, ராஜபக்சக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதே கடந்த காலத்தில் வலுவான நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இப்போது அவர்களுக்கு எதிராக பல சட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது, 'ஊழல் நிறைந்த நிர்வாகம்' என்று அவர்களை நாங்கள் குற்றம் சாட்டியிருந்தோம். பொதுமக்களும் அவர்களுக்கு எதிராக ஏற்கனவே தங்கள் தீர்ப்பை வழங்கிவிட்டனர்.
சமீபத்தில் ஒரு வழக்கில் பசில் ராஜபக்ச மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam