அமெரிக்காவுக்கு முதலிடம் வழங்குவதாக சத்தியம் செய்த பசில்! வெளிவரும் தகவல்கள்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தெளிவான மேலதிக பதில் அரசாங்கத் தரப்பில் இருந்து முன்வைக்கப்படவில்லை என லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதான செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண (Prof.Tissa Vitharana) தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது 60 வீதமான குடும்பங்கள் வறுமையில் வாடுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலைமை காரணமாக நாட்டில் எதிர்கால சந்ததி போஷாக்கின்மையால் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 5 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளில் ஐந்தில் ஒரு பிள்ளை போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்குவதன் மூலம் மக்களின் பொறுமை எல்லை மீறி சென்று அது அரசாங்கத்தின் தோல்விக்கு வழிவகுக்கலாம்.
எமது நிதியமைச்சர் அமெரிக்க பிரஜை. அமெரிக்காவுக்கு முதலிடத்தை வழங்குவேன் என அவர் சத்தியம் செய்துள்ளவர்.
அப்படியான நிலைமையில், அவரால் எப்படி எமது நாட்டுக்கு முதலிடத்தை வழங்க முடியும் எனவும் திஸ்ஸ விதாரண கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்கா சமசமாஜக் கட்சியின் 86வது ஆண்டு மாநாட்டில் உரையாற்றும் போதே நுண்ணுயிரியல் துறை போராசிரியருமான திஸ்ஸ விதாரண இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.