இன்று மதுபானசாலைகள் திறக்கப்படுமா! வெளியான புதிய அறிவிப்பு
இன்றையதினம்(13.04.2024) மதுபானசாலைகள் திறக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் பொய்யானது என கலால் திணைக்களம் மறுத்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (12.04.2024) மற்றும் இன்று (13.04.2024) நாடு பூராகவும் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என கலால் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
கடுமையான சட்ட நடவடிக்கை
எவ்வாறாயினும், வீட்டு விருந்தினர்கள், ஹோட்டல்களில் தங்கியிருக்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில்(Sri Lanka Tourism Development Authority) பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று நட்சத்திர வரம்பிற்கு அப்பால் உள்ள தங்குமிடங்கள் (boutique villas) என்பவற்றிற்கு இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புத்தாண்டு காலத்தில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொய்யான தகவல்களை பரப்பும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும் நாட்டில் வழக்கமான மதுபான விற்பனை ஏப்ரல் 14, ஞாயிறு காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan
