வர்த்தக வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்
இலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்பு பெறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை எதிர்வரும் 16ஆம் திகதி (16.08.2023) அன்று ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதத்திற்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கான அறிவிப்பு
சந்தை கடன் வழங்கல் வீதங்கள் விரைவாக குறைக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நியதி ஒதுக்கு விகித குறைப்பின் நன்மையை தாமதமின்றி அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் மத்திய வங்கியானது சந்தை அபிவிருத்திகளை தொடர்ந்தும் கண்காணித்து தேவைப்படின் பொருத்தமான நிர்வாக வழிமுறைகளை எடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.