தனியார் துறையின் வட்டி வீதங்கள் குறைப்பு தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநரின் அறிவிப்பு
கொள்கை வீதங்களை மேலும் தளர்த்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் வைத்து நேற்றைய தினம் (07.08.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாட்டின் உண்மையான பொருளாதாரத்தின் மீது நிதிக் கொள்கையின் பரிமாற்றம் இதுவரை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் துறையின் வட்டி வீதங்கள்

அத்துடன் தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வீழ்ச்சியடைந்துள்ள பணவீக்க வீதத்திற்கு ஏற்ப கொள்கை வீதங்களை மேலும் தளர்த்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam