வெளிநாடுகளில் இருந்து வைப்புச் செய்யப்பட்ட பெருமளவு பணம்! வெளிவரும் இரகசிய தகவல்கள்
போராட்டங்களில் பங்கெடுத்திருந்த பலருக்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தெரியவந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அவற்றில் அதிகப்படியான பணம் உலகில் போதைப்பொருள் கடத்தலில் முக்கியமாக ஈடுபட்டுள்ள கௌதமாலாவிலிருந்தே அனுப்பப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (09.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்கான பல பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனாலேயே கௌதமாலாவிலிருந்து பணம் அனுப்பப்பட்டிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 20 மணி நேரம் முன்

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
