ஹோட்டல் அறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்! தலைமறைவான சந்தேகநபர் கைது
பண்டாரவளை நகரில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் மனைவியைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் விஷம் அருந்தியதாக கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி - கோணவலயை சேர்ந்த 50 வயதான நபரொருவர் (23) ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளதுடன், மனைவியை ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் அவசரமாக ஹோட்டலில் இருந்து வௌியேறியதால், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் இருவர் அறையை சோதனையிட்ட போது குறித்த பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சந்தேகநபர் கைது
இதன்போது ஹோட்டலிலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் கடிதமொன்றினை எழுதிவைத்து தலைமறைவாகியிருந்த நிலையில்,பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த நபர் விஷம் அருந்தியமை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர் விசாரணைக்காக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 18 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri