முல்லைத்தீவில் அரங்கேற்றப்பட்ட பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம்
முல்லைத்தீவு (Mullaitivu) முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய அரங்கில் மாவீரன் பண்டார வன்னியனின் வரலாற்று நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
முள்ளியவளை கலைத்தாய் நாடக கலாமன்றத்தின் ஏற்பாட்டில் கலைஞர் அண்ணாவியார் என்.எஸ். மணியத்தின் நெறியாள்கையில் நேற்று முன்தினம் (20) இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
முல்லைமோடி
இந்த நிகழ்வில் தலைமை உரையாற்றிய வைத்திய கலாநிதி கை.சுதர்சன் கலை வளர்ச்சியின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.
இதில் மக்கள் மத்தியில் பல இலக்கியங்கள் இன்று வரை தமிழை வளர்த்து சென்றாலும் குறிப்பிட்ட இடைவெளியிலேயே நாடகத்தின் வளர்ச்சி அமைந்துள்ளது என்றும் கூத்தில் இலங்கையில் முன்னணியில் நிற்கின்ற முல்லைமோடி என்ற கூத்து தொடர்பாகவும் இதன்போது கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.