விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன?

Srilanka United Kingdom Kilinochi
By Independent Writer Sep 03, 2021 07:27 PM GMT
Report

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தில், தமிழீழத் தேசியக்கொடி தொடர்பிலும், சுயநிர்ணய உரிமைப்போராட்டம் தொடர்பிலும் வெளிப்பட்டுள்ள பிரித்தானியாவின் நிலைப்பாடு புதியதொரு அரசியல் வெளியினை திறந்துள்ளதாகவும், தடை நீடிப்புக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டவாளர்களுடன் கலந்தாலோசிக்கப்படுவதாகவும்  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றியாக, பயங்கரவாத தடைப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தது.

இர்தீர்ப்பு வெளிவந்த அடுத்த 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.

தமக்கு 90 நாட்கள் அவகாசம் தருமாறு ஆணையத்திடம் பிரித்தானிய அரச தரப்பு கோரியிருந்தது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான புதிய ஆதாரங்களுடன் தடையினை நீடிப்பதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜீலை 2020ல், கிளிநொச்சியில் வெடி மருந்தொன்று தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளை, தவறுதலாக அது வெடித்திருந்ததாகவும், இது கரும்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் வெடிமருந்து போல் கருப்படுகின்றது.

டிசெம்பர் 2020ல், பேருந்தில் கைது செய்யப்பட்ட தம்பதிகளிடத்தில் கிளைமோர் குண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இவர்களில் ஒருவர் முன்னாள் போராளி. பையில் கிளைமோர் இருந்துள்ளது. இவ்விரு சம்பவங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப்பிரிவு சிறுசிறு குழுக்களாக விடுதலைப்புலிகளை நோக்கை நிறைவேற்றுவதனை இலக்காக கொண்டு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதாக கருதுகின்றோம் என பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் தமிழீழத் தேசிய துக்க நாளான மே18ல் (2020) சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சு, மட்டக்களப்பு மாநாகரசபை மற்றும் இந்தியா கேரளாவில் உள்ள சிறிலங்கா துணைத்தூதரக இணையத்தளங்கள் 'சைபர் தாக்குதலுக்கு' இலக்கானதாகவும், இந்த இணையத்தளங்களில் 'தமிழீழத் தேசியக் கொடி' அல்லாது, 'விடுதலைப் புலிகளின் கொடி' தரவேற்றம் செய்யப்பட்டிருந்தாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை சுதந்திரமும், இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை இலக்காக கொண்டு தமிழ்மக்களின் அரசியல் போராட்டங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை இடையூறாக இருக்கின்றது என்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாதுரைக்கு பதிலளிக்கும் வகையில் ' சுயநிர்ணய அரசியல் போராட்டங்களுக்கு' தடைவிதிக்கப்படவில்லை என உள்துறை அமைச்ச தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் 42 நாட்களுக்குள் தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யலாம் என்ற நிலையில், தடைக்கு எதிரான சட்டப் போராட்டத்தின் அடுத்த கட்டம் தொடர்பில் சட்டவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்குவதற்கான சட்டப் போராட்டம் என்பது, சர்வதேச தளத்தில் தமிழர்களது அரசியல் போராட்டத்துக்கு புதிய வெளிகளை திறக்கும் என்ற நிலையில், தமிழீழத் தேசியக் கொடி மற்றும் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் தொடர்பிலான பிரித்தானிய உள்துறை அமைச்சின் நிலைப்பாடு, புதியதொரு அரசியல் வெளியினை திறப்பதோடு இதனை கூர்மைப்படுத்தி எமது இலக்கினை அடைய வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US