இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள தடை! வீடுகளில் இருந்து வெளியில் வர முடியாமல் சிக்கலில் மக்கள்
மின்சார உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக பழுதடையும் மின்னுயர்த்திகளுக்கான சில உதிரிப்பாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் அவற்றைப் பழுதுபார்க்க முடியாத நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பைப் பொறுத்தமட்டில் பெரும்பாலானோர் உயர்ந்த தொடர் மாடி வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். குறித்த தொடர்மாடி வீடுகள் 10 தொடக்கம் 35 வரையான மாடிகளைக் கொண்டிருப்பதுடன் மின்னுயர்த்திகள் மூலமாகவே அவற்றை இயக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.
இந்த நிலையில் தொடர்மாடி வீடுகளில் வசிப்போரின் மின்னுயர்த்திகள் செயலிழந்தாலோ அல்லது மின்சாரம் தடைப்பட்டாலோ மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் வர முடியாமலும் வெளியிலிருந்து உள்ளே செல்ல முடியாமலும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதைத் தவிர்க்க முடியாது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,