சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் சாதனை படைத்த பம்பலப்பிட்டி மாணவி
பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் மாணவி ஸ்ரீ மாதுரி சிந்தனைச் செல்வன் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற சர்வதேச Chemistry Olympiad 2024 போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் 3A சித்தி பெற்று, மாவட்ட ரீதியில் 4 ஆம் இடத்தையும், தேசிய ரீதியில் 22 ஆம் இடத்தையும் ஸ்ரீ மாதுரி பெற்றுள்ளார்.
சர்வதேச ஒலிம்பியாட் போட்டி
தேசிய ரீதியில் இடம்பெற்ற Chemistry Olympiad 2024 போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற ஸ்ரீ மாதுரி, சவுதி அரேபியா ரியாத் நகரில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவானார்.
அங்கு வெண்கல பதக்கத்தை வென்று நாட்டுக்கும் தான் கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ஸ்ரீ மாதுரி. அவரது தந்தை சிந்தனை செல்வன் பௌதிகவியல் ஆசிரியர் என்பதும், தாயார் ஸ்ரீ கௌரி உயிரியல் ஆசிரியை மற்றும் விரிவுரையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது