யாழின் நீர்தேவையை பூர்த்தி செய்யப்போகிறதா பாலியாற்று நீர் விநியோகத்திட்டம்
போத்தல் தண்ணீர் நகரமாக மாறிவிட்டிருக்கிற யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப்பிரச்சினையானது பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது.
நம் கொண்டாட்டங்களில் "செம்புகள்" காணாமல் போய் விட்டு பல காலம் ஆகிவிட்டது.
யாழ் மாவட்டத்தை பொறுத்த வரை யாழ் மாநகரசபைப்பிரதேசங்கள் மற்றும் தீவகபிரதேசங்கள் மிகவும் குறிப்பாக குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்கின்ற பிரதேசங்களாகும்.
நன்னீர் மாசடைதல்
யாழில் நன்னீர் வற்றிப்போதல், நன்னீர் உவராதல், நன்னீர் மாசடைதல் போன்ற பிரச்சினைகள் நீண்ட காலத் திற்கு முன்பே ஆரம்பித்து விட்டன.
விவசாயத்திற்காக கிணறுகள் மற்றும் ஆழ்துளைக்கிணறுகளை அதிகளவாக தோண்டி வருவதால் நீர் வற்றிப்போதலும் ஏற்பட்டுவிட்டது.
சனத்தொகை வளர்ச்சியின் மூலம் நீர்ப்பாவனை அதிகரிப்பதால் ஏற்கனவே யாழ்ப்பாண கரையோரப்பகுதிகளில் நீர் உவராதலும் ஏற்பட்டுவிட்டது.
அண்மைய செய்திகளின் படி சில ஆய்வாளர்களால் கடல்பகுதியில் இருந்து பல கிலோமீட்டர்கள் தொலைவில் கூட சில கிணறுகள் அண்மையில் உவர் நீராக மாறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ். குடாநாட்டு நீரில் முதலாவதாக உவர்த் தன்மை, இரண்டாவது அதிக நைத்திரேட்டின் செறிவு, மூன்றாவது வன் தன்மை (hardness) நான்காவது அதிக நுண்ணங்கி செறிவு போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன.
குடாநாட்டு நீர்க்கேள்வியை பூர்த்தி செய்ய இரணைமடு நீர் விநியோகம் மற்றும் உவர்நீரை நன்னீராக மாற்றுதல் போன்ற செயற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ். குடாநாட்டின் தற் போதைய நீர்க்கேள்வி நாளொன்றுக்கு 50,000 கனமீற்றர்களுக்கு அதிகமாக உள்ளது. அங்கு 2028 இல் எதிர்பார்க்கப்படும் சனத்தொகை 926,116 பேர் ஆகும்.
தேவையான நீர் அளவு 88,500 கன மீற்றர்கள். 2058 இல் எதிர்பார்க்கப்படும் சனத்தொகை அளவு 1,023,350 பேர். தேவையான நீரின் அளவு 177,700 கனமீற்றர்கள் ஆகும்.
இது இவ்வாறிருக்க யாழிற்க்கு குடிநீர் வழங்க பல்வேறு திட்ட முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன ஆறுமுகம் திட்டம், பாலியாறு திட்டம், வல்வை குடிநீர் திட்டம் என்பவற்றின் மூலம் நீடித்த மற்றும் குடாநாட்டின் நீர்வளத்தை மேம்படுத்தும் திட்டங்கள் முன்மொழியப்பட்டிருந்தன. மேலும், சில பாதியிலேயே கைவிடப்பட்டன.
கடல்நீர் சுத்திகரிப்பு
குறிப்பாக இரணைமடுத்திட்டம் விவசாயிகளின் ஆட்சேபனைகள் காரணமாக கைவிடப்பட்டது. அது மேலதிக மழை கிடைக்கும் மூன்று மாதங்களுக்கு நீரை யாழுக்கு கொண்டுசெல்வதற்க்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட தாளையடியில் நிர்மாணிக்கப்படும் SWRO கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் செலவுகள் மற்றும் பராமரிப்புச்செலவுகள் அதிகம் என விமர்சிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அத்திட்டம் தொடங்கி 2023ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்படும் எனவும் இதனூடாக மூன்று இலட்சம் பயனாளர்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுவதாக கடந்தகால அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படாத பல தரப்புகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலியாற்று நீர் விநியோக திட்டம் ஐனாதிபதியால் வரும் ஐனவரி மாதம் 06 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 26.02.2018ஆம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வருடம் பூராகவும் கடலுக்கு சென்று கொண்டிருக்கும் நீரை தடுத்து ஒரு நீர் நிலையை உருவாக்குவதன் ஊடாக எந்த எதிர்ப்புக்கள், அல்லது தடைகளும் இல்லாமல் குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு நீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என்ற கருத்து வடக்குமாகணசபை அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானத்தால் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கமைய வேண்டிய பூர்வாக ஆய்வுகள் பிரதம செயலர் மற்றும் பிரதி பிரதம செயலர் (பொறியியல்சேவைகள்) ஆகியோரின் மேற்கொண்டு நர தேவையை பூர்த்தி செய்யலாம் என்ற கருத்து எம்மால் முன்வைக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கமைய வேண்டிய பூர்வாக ஆய்வுகள் பிரதம செயலர் மற்றும் பிரதி பிரதம செயலர் (பொறியியல்சேவைகள்) ஆகியோரின் வழிகாட்டலில் மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்டது.
இவை தொடர்பான அறிக்கை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது அவர் தலமையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது மட்டுமல்லாமல், இத் திட்டத்தின் மேல் நடவடிக்கைகளுக்கான சாத்தியகூற்று ஆய்வுக்கு தேவையான நிதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்து மேல் நடவடிக்கை தொடர்ந்து.
இத் திட்டத்தின் மேல் நடவடிக்கைகளுக்கான சாத்தியகூற்று ஆய்வுக்கு தேவையான நிதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்து, நடவடிக்கை தொடர்ந்து வந்தது.
மேலும் இத்திட்டம் தொடர்பான பிரேரணை 04.10.2018ம் திகதி நடைபெற்ற வடமாகாண சபையின் 133வது அமர்விலும் அவைத்தலைவர் சிவஞானத்தினால் முன்வைக்கப்பட்டு அப்போதைய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் வழிமொழியப்பட்டு சபையில் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
குடிநீர் விநியோகத்திட்டம்
மேலும் இந்த திட்டம் சம்மந்தமான மற்றய
பல விடயங்களும் 133வது அமர்வில் விவாதிக்கப்பட்டும் இருந்தது.
அத்தோடு வடமாகாணசபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு குடிநீர் விநியோகத்திட்டமும் இதுவேயாகும்.
தொடர்ச்சியாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களின் போது சீ.வி.கே சிவஞானம் அவர்களினால் இத்திட்டம் தொடர்பாக கருத்து முன்வைக்கப்பட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வலியுறுத்தப்பட்டு கடந்த பாதீட்டில் உத்தியோக பூர்வமாக முதற்கட்ட நிதியாக 250மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்பித்து வைக்கப்படவும் உள்ளது.
பாலியாறு திட்டத்தின் மூலம் "37 CMC "தண்ணீர் பெறமுடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன். இதன் மூலம் யாழுக்கான முழுமையான நீர்த்தேவையை பூர்த்தி செய்யமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் 2029ஆம் ஆண்டு நிறைவடையும் எனவும் துரித கதியில் வேலைகள் இடம்பெற்றால் அதற்க்கு முன்னதாகவே நிறைவடையும் எனவும் இதற்கான மொத்த செலவீனமாக 6300கோடி ரூபாய்கள் என கணிக்கப்பட்ட போதும் அது தற்போதைய விலைவாசி சூழ்நிலைகளால் சற்று அதிகமாக்கூடும் என்றும் இதன் பயணப்பாதையில் மன்னார் மாவட்ட சில பிரதேச மக்களும் பயனடைய இருக்கிறார்கள் என்றும் சீ.வி.கே.சிவஞானம் குறிப்பிடுகின்றார்.
கனிம வளமான நிலத்தடி நீரை உறிஞ்சி "பில்டர் தண்ணீர் "வியாபாரம் அதிகமாக உரிய அனுமதிகள் இன்றி யாழ் மாவட்டம் எங்கும் இடம்பெற்று வருகிறது.
குறிப்பாக தீவகப்பகுதிகளில் வேறு பிரதேசத்தில் இருந்து இவ்வாறு தண்ணீரை கொண்டு சென்று தீவகங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
பிரதேச சபைகளும் நீர் விநியோக விடையத்தில் பல சவால்களை எதிர்கொள்கின்றன. அதே நேரம் அசமந்தமாகவும் செயற்படுகின்றன கனிமவளமான நிலத்தடி நீரை உறிஞ்சி வியாபாரப்பொருளாக்க உரிய அனுமதிகள் இல்லை.
ஏதேனும் அரச அல்லது உள்ளூராட்சி நிறு வனம், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் இயற்கை அல்லது ஊற்று நீர் அல்லது நிலத்தடி நீர் பயன்படுத் துவதாக இருந்தால் அச்செயல் அல்லது திட்டத் தின் பூரண விவரங்கள் அடங்கிய திட்டத்தின் முன் மொழிவுகளை நீர் வழங்கல் சபைக்கு (water resource board) வழங்க வேண்டும்.
அனுமதி இன்றி தண்ணீர் வியாபாரம்
அச்சபையின் அனுமதியுடன், அதன் மேற்பார்வையின் கீழும் மற்றும் அதனால் வழங்கப்படும் உத்தரவுக்கு ஏற்றவாறும் அத்திட்டம் செயல்படுத்த வேண்டும்.
இவை எல்லாம் நீர் வழங்கல் சபையின் எழுத்துமூல அனுமதியைப் பெற்று செயற்படுத்தப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடி காலமைப்புசபையின் யாழ். பிராந்திய முகாமை யாளரினால் 2019.04.18 ஆம் திகதி உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதன் பிரதிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அனைத்து உள்ளூராட்சி சபை களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
உரிய அதிகாரிகள் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. பல சுத்திகரிக் கப்பட்ட நீர் விற்பனை நிலையங்கள் இங்கு இயங்கி வருகின்றன.
அவற்றுக்கு எந்தவிதமான நிபந்தனை களும் கட்டுப்பாடுகளும் இருப்பதாக தெரியவில்லை. உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி எவ்வாறு தண்ணீர் வியாபார நிலையங்கள் நடாத்தப்படுகின்றன.
இது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் யாழ் மாநகரசபை மற்றும் யாழ் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் கேட்கப்பட்டது.
நீர் வியாபாரம் தொடர்பாக மாகாணசபை மற்றும் மாநகர சபையினால் துணைவிதிகள் உருவாக்கப் படவில்லை. நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் வரையறுக்கப்படவில்லை.
இக்காரணங்களினால் அனுமதி வழங்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப் படவில்லை என யாழ் மாநகரசபை குறிப்பிடுகிறது.
யாழின் குடிநீர் பிரச்சினை
அதற்கான வியாபார அனுமதிப்பத்திரங்களுக் கான தொகையும் அறவிடப்படவில்லை எனவும் கூறப்பட்டது.
அதே நேரம் தேசிய நீர்வழங்கல் வடி காலமைப்பு சபையினாலும் நீர் விற்பனை நிலையங்களுக்கு அனுமதி தொடர்பான எந்த ஒரு நடைமுறைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
தனியாரின் வேண்டுகோளுக்கிணங்க நீர் மாதிரிகளைப் பெற்று நீர் பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்படுவது மட்டுமே நடைபெறுகிறது.
பின்னர் யாழ் மாநகரசபை 2021 ஓம் ஆண்டு புதிய அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை கொண்டுவந்ததமை குறிப்பிடத்தக்கது.
பாலியாறு திட்டம் மூலம் யாழின் குடிநீருக்கான பிரச்சினை முற்றாக தீர்க்கப்பட எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் தீவகங்களில் இருந்து நீர்ப்பரச்சனை காரணமாக இடம்பெயர்தல்,புலம் பெயர்தல் கணிசமான அளவு வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.