பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு! நள்ளிரவு முதல் நடைமுறை..
புதிய இணைப்பு
இன்று(23.03.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி, 450 கிராம் பாணின் விலை 10 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய 450 கிராம் பாணின் புதிய விலை 130 ரூபாவாகும்.
ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் இதேபோல 10 ரூபாவால் உயர்த்தப்படும் என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சமீபத்திய எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விலை அதிகரிப்பு உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகளை அதிகரித்துள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நாடு முழுவது பாண் பிரதான உணவுப் பொருளாக இருப்பதன் காரணமாக, தற்போதைய விலை அதிகரிப்பு மக்களை நேரடியாக பாதிக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முடிவு இன்று..
இந்த நிலையில், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை உயர்த்துவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று(23/03/2026) முடிவு எடுக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் தமது துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
பாண் உட்பட அனைத்து பேக்கரி பொருட்களின் உற்பத்தி முதல் விநியோகம் வரை எரிபொருள் ஒரு அத்தியாவசிய காரணி என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan