ஒரு மூட்டை கோதுமை மாவின் விலை 12500 ரூபாய்: வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்
வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் எனவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட கோதுமை மா மூட்டை ஒன்றின் விலை 12 ஆயிரத்து 500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
4 ஆயிரம் ரூபாவுக்கும் குறைவாக இருந்த கோதுமை மா மூட்டை 12 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்து கொள்வனவு செய்ய முடியாத நிலைமை வெதுப்பக உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு தமது தொழிற்துறையின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் ஜெயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வெதுப்பகங்களில் தயாரிக்கப்படும் பாண் உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan