விமானப் பணிப்பெண்கள் இருவரிடம் தவறாக செயற்பட முற்பட்டவருக்கு பிணை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை தவறான ரீதியாக துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் பயணியை, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று தலா 100,000 மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்துள்ளார்.
இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்காவுக்கு விமானத்தில் பயணம் செய்த இந்த பயணி, இன்று(12) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர்
சந்தேக நபர், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஸ்வீடன் மற்றும் இலங்கையின் இரட்டைக் குடிமகன் ஆவார்.
விமானப் பயணத்தின் போது சந்தேக நபர் மது அருந்தியிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், அந்த பயணி மது போதையில் இருந்தபோது, சக பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள ஆரம்பித்தார்.
பின்னர் அவர் பணியில் இருந்த இரண்டு பெண் விமான பணிப்பெண்களை தவறான ரீதியாக துன்புறுத்த முயன்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா? Cineulagam
