நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை! அம்பாறையில் வெள்ளப்பெருக்கு
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் கிட்டங்கி தாம்போதி வீதியினை கடப்பவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாவிதன்வெளி பிரதேச செயலகம், நாவிதன்வெளி பிரதேச சபை, இலங்கை இராணுவம், கடற்படை, கல்முனை பொலிஸார், சவளக்கடை பொலிஸார், தன்னார்வ ஆர்வலர்கள் இணைந்து இப்பொறிமுறையினை உருவாக்கியுள்ளதுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுப்போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இயந்திர படகுகள் சேவையில்
இதற்கமைய உழவு இயந்திரம் இயந்திர படகுகள் ஊடாக இரு கரையிலும் உள்ள பொதுமக்கள் அத்திய அவசிய தேவைகளுக்காக ஏற்றி இறக்கப்பட்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இடையே வீதி மூடப்பட்டு பொலிஸார் இராணுவம் பாதுகாப்பு கடமையில் இன்றும் ஈடுபட்டுள்ளதை காண முடிகின்றது.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.

அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, தைக்கா நகர் , அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.
மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.













பிரித்தானியாவின் இலையுதிர்கால பட்ஜெட் 2025 - ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த புதிய வரி திட்டங்கள் News Lankasri