நாட்டை உலுக்கும் சீரற்ற காலநிலை! தயார் நிலையில் கடற்படையினர்
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டை உலுக்கியுள்ள சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தெற்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களை உள்ளடக்கிய பத்தொன்பது (19) அனர்த்த நிவாரணக் குழுக்கள் இன்று (2025.11.28) கடற்படையால் கடமையில் ஈடுத்தப்பட்டுள்ளன.
நிவாரணப் பணிகள்
மேலும், இந்த நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள், அனர்த்த முகாமைத்துவ மையத்துடன் இணைந்து, 2025 நவம்பர் 27ஆம் திகதிக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட 911 பேரைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, பலத்த காற்றினால் விழுந்த மரங்களை அகற்றுதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது மற்றும் சிறிய படகுகள் மூலம் மக்களின் அன்றாட தேவைகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை கடற்படை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தேவைக்கேற்ப கடமையில் ஈடுபடுத்த ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் மேலதிக அனர்த்த நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.



இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri