உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி (Photos)
வவுனியாவில் காச நோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றுள்ளது.
உலக காச நோய் தினமான இன்று வவுனியா மாவட்ட வைத்தியசாலை காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றிருந்தது.
இதன்போது காச நோய் தொடர்பான கருத்தரங்கு ஒன்று காலை 9.30 மணிக்கு காச நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன் பின்னர் காச நோயை முடிவுக்குக் கொண்டு வர முதலிடுவோம், உயிர்களைக் காப்பாற்றுவோம் எனும் தொனிப்பொருளில் மக்களிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக இந்த பேரணி இடம்பெற்றிருந்தது.
இப்பேரணியானது காச நோய் கட்டுப்பாட்டுப் பிரிவிலிருந்து வவுனியா மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக பஜார் வீதியினை அடைந்து மீண்டும் வைத்தியசாலையினை அடைந்திருந்தது.
இப்பேரணியில் காச நோய் தொடர்பான பதாதைகளை ஏந்திய வண்ணம் குறித்த பிரிவிற்கான வைத்தியர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள், சுகாதார பிரிவினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையான
காலப்பகுதியில் 17553 பேருக்கு காச நோய் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டு
336 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், 48 பேர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.



4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan