உலகளவில் தீவிரமடையும் நோயினால் இறக்குமதிக்கு அனுமதி மறுப்பு:ஏற்பட்டுள்ள சிக்கல்
இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு கால்நடை சுகாதாரத் திணைக்களம் நேற்று அனுமதி வழங்க மறுத்துள்ளது.
நாட்டில் நிலவும் முட்டைக்கான தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
பறவை காய்ச்சல் பாதிப்பு
இந்நிலையில் இந்தியாவின் சில மாநிலங்களில் பரவி வரும் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து முட்டைகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பறவைக்காய்ச்சல் இல்லாத நாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய முடியும் என சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் முட்டை ஏற்றுமதியில் ஈடுபடும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற பிரதான நாடுகளிலும் பறவை காய்ச்சல் பரவிவருவதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டை ஏற்றுமதியில் ஈடுபடும் பிரதான நாடுகள்

முட்டை ஏற்றுமதியில் ஈடுபடும் பிரதான நாடுகளில் நெதர்லாந்து, துருக்கி, போலந்து, அமெரிக்கா, மலேசியா, ஜேர்மனி, சீனா,ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முதன்மை வகிக்கின்றன. இந்த பட்டியலில், இந்தியா 22 ஆவது இடத்தில் உள்ளது.
இவ்வாறான சூழலில் நாட்டிற்கு முட்டையை இறக்குமதி செய்யும், மற்றுமொரு நாட்டை கண்டறிவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri