கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்காக அவுஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவு
கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்காக அவுஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ச்சியான உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் மேத்யூ டக்வொர்த் தெரிவித்தார்.
நேற்றையதினம்(11) மட்டக்களப்பு ஊடக அமையத்திற்கு விஜயம் செய்த அவுஸ்ரேலிய தூதுவர் அங்கு ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள்,கிழக்கு மாகாணத்தின் தற்போதைய தேவைப்பாடுகள் குறித்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம்,சுற்றுலாத்துறை,மீன்பிடித்துறையினை மேம்படுத்துவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் உதவவேண்டும் என்ற கோரிக்கை மட்டு ஊடக அமையத்தினால் முன்வைக்கப்பட்டது.
தொடர்ச்சியான உதவி
அதேபோன்று வடகிழக்கு உட்பட இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படாமை குறித்தும் அதனை முன்னெடுப்பதற்கு சர்வதேச ரீதியான அழுத்தங்களை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவுஸ்ரேலிய தூதுவர், இங்குள்ள சமூகத்தினர், அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடி, கிழக்கு மாகாணத்தின், குறிப்பாக மட்டக்களப்பு பகுதியைச் சுற்றியுள்ள சில முக்கிய பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முயன்றேன்.

எனது இலங்கைப் பயணத்தின் எஞ்சிய காலத்தில், கிழக்கு மாகாணத்தில் அதிக நேரத்தைச் செலவிடவும், மீண்டும் இங்கு வந்து இந்த மாகாணம் எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்பதைப் பார்க்கவும் நான் ஆவலுடன் இருக்கிறேன்.
இலங்கையின் இப்பகுதியில் உள்ள சமூகத்தின் தேவைகளையும் விருப்பங்களையும் ஆதரிக்க அவுஸ்திரேலியாவால் முடிந்த அனைத்தையும் செய்வதை உறுதிப்படுத்த நான் கடமைப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam