அவுஸ்திரேலிய தூதுவர் மட்டக்களப்பிற்கு விஜயம்! (Video)

Australia Sri Lanka Batticaloa Ambassador Visit
By Kumar Jan 10, 2022 12:52 PM GMT
Report

இலங்கையின் மிகப்பழமையான கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் மட்டக்களப்பு கோட்டையின் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் இலங்கைக்கான அவுஸ்திரேலியா நாட்டின் தூதுவர் டேவிட் கொலின் மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 வருடங்கள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு கோட்டையினை அவுஸ்திரேலியாவின் நிதியுதவியுடன் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் ஆராயும் வகையிலேயே இலங்கைக்கான அவுஸ்திரேலியா நாட்டின் தூதுவர் டேவிட் கொலின் மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் வரவேற்றதை தொடர்ந்து குறித்த கோட்டையின் புனரமைப்பு பணிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது 2019ம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுவரும் கோட்டை புனரமைப்பு பணிகள் பூர்த்தியடைந்ததும் குறித்த கோட்டையினை சுற்றுலாத்தளமாக மாற்றும் வகையிலான செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

டச்சுக் கோட்டை கட்டுவதற்கான ஆரம்ப பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 400 ஆண்டு நிறைவினை முன்னிட்டு, திறன் உள்ளடங்கிய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளும் S4IG நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விசேட நூல் மற்றும் மட்டக்களப்பு டச்சுக் கோட்டையின் அபிவிருத்தி எனும் நூலும் அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் டேவிட் ஹெலியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், S4IG நிறுவனத்தின் முகாமையாளர் எஸ். மரீனா, S4IG நிறுவனத்தின் பிரதி குளுத் தலைவர் கமலநாதன் ஜெயதாஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலர் பிரசன்னமாயிருந்தனர்.

இதன்போது நினைவுப்பரிசுகள் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப் பயணத்திட்டங்கள் பலவற்றுக்கு உதவி வழங்குவதற்கு அவுஸ்ரேலிய தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் இதன்போத தெரிவித்துள்ளார்.   


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US