அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மீது ஐசிசி குற்றச்சாட்டு: கறுப்புப்பட்டி அணிந்த விவகாரம்
அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.
பெர்த்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் கையில் கறுப்புப்பட்டி அணிந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கறுப்புப்பட்டி
காசா பகுதியில் நடக்கும் குற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாம் இவ்வாறு அணிந்ததாக உஸ்மான் கவாஜா முன்னர் தனது X தளத்தில் தெரிவித்திருந்தார்.

அனுமதியின்றி இதுபோன்ற செயலைச் செய்ததற்காக கவாஜா உடை மற்றும் உபகரண மீறல்களின் கீழ் தண்டிக்கப்படுவார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேல் - ஹமாஸ் போரில் உயிரிழந்த அப்பாவி மக்களை ஆதரிக்கும் வகையில் பாதணிகளை அணியப்போவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கவாஜா தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 14 மணி நேரம் முன்
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri