பெட் கம்மின்ஸின் சாதனையுடன் பங்களாதேஸை வீழ்த்திய அவுஸ்திரேலியா
நடைபெற்று வரும் உலகக்கிண்ணத் தொடரின் இன்றைய (21.06.2024) போட்டியில் பங்களாதேஸ் அணியை எதிர்கொண்ட அவுஸ்திரேலிய அணி டக்ளஸ் லூயிஸ் (DLS Method) முறையில் 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி (Australia) முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் (Bangladesh) அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 140 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.
பங்களாதேஸ் அணி சார்பாக அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 36 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பிரெட் லீ
சிறப்பாக பந்து வீசிய பெட் கம்மின்ஸ் (Pat Cummins) ஹெட்ரிக் (Hat Trick) முறையில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இறுதியாக 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரில் பங்களாதேஸுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ (Brett Lee) ஹெட்ரிக் விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
Pat Cummins takes the first Men's T20I World Cup hat-trick for Australia in 17 years!
— Muhammad Saeed (@saeedmalik91) June 21, 2024
Just Marvellous ?#BANvsAUS #AUSvsBANpic.twitter.com/tA3ZBoH9AX
அதன்பின்னர், பெட் கம்மின்ஸ் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
அதனையடுத்து, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்த வேளை, மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
ஆட்டநாயகன்
எனினும், சிறிது நேரத்தில் டக்ளஸ் லூயிஸ் முறையில் அவுஸ்திரேலிய அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டேவிட் வார்னர் (David Warner) 35 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றார்.
அதேவேளை, போட்டியின் ஆட்டநாயகனாக பெட் கம்மின்ஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |