மத்திய வங்கியை கொள்ளையடிக்க முயற்சி! அம்பலமான சதித்திட்டம்
இந்நாட்டின் மத்திய வங்கி பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்படும் வரை காத்திருந்த சிலர், இம்முறையும் மத்திய வங்கியை கொள்ளையடியக்க முடியாமல் போகும் போது, ஏதாவதொரு வகையில் தாம் சார்ந்த கையாட்களை நியமிக்க முயல்வதாகத் தெரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்களாக மத்திய வங்கி மீது குற்றம் சுமத்தப்படுவதற்கான போலிச் சாட்டுகளை சுமத்திப்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மத்திய வங்கியை கொள்ளையடிக்கத் திட்டம்
மத்திய வங்கியை மீண்டும் கொள்ளையடிப்பதற்கு, அந்தப் பணிக்குப் பொருத்தமான உற்ற நட்பு வட்டார கையாட்கள் கும்பலை நியமிப்பது தங்களுக்கு இலகுவானது என அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.
தேசிய பட்டியல் ஊடாக பாக்கியத்தால் நியமிக்கப்பட்ட சிலரும் இதற்கு துணைபோவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போது இந்நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தடையச் செய்ய முன்நின்ற பிரதான காரண கர்த்தாக்கள் சகலரும் செங்கம்பள வரவேற்புக்கும் மேலாக மிகவும் பாதுகாப்பாக கரைசேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை வக்குரோத்தடையச் செய்த ஒருவர் புத்தகம் எழுதுகிறார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பொருளாதாரத்தை வக்குரோத்தாக்கிய மற்றொரு நபர் சாம்பலிலிருந்து மீண்டும் எழ முயற்சிப்பதாகவும், இன்னும் சிலர் அவ்வாறு எழ முயற்சிப்பவர்களுக்கு ஒட்சிசன் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.