அத்தனகல்ல பிரதேச சபையில் கடும் மோதல்! - பெண் உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி
அத்தனகல்ல பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற மோதலில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண் உறுப்பினர் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதேச சபையின் தலைவரும் இந்த மோதலில் ஈடுபட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் உறுப்பினரது காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேவிபி பிரதேச சபை உறுப்பினருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பின்னர் மோதலாக மாறியதாகவும், இதனால் பகல் 12.30 மணி வரை சபை சூடுபிடித்ததாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam
