விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபரை இரண்டு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,கடந்த 13.10.21 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை
பிரதேசத்திற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது
தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள வணிக நிலையம் ஒன்றுக்கு விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்றபோது சந்தேகநபர் ஒரு நாளைக்கு ஒரு விலையினை தீர்மானிக்கின்றீர்கள் என அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதினை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 21.10.21 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அரச உத்தியோகத்தர்களை தாக்கியமைக்காக
இரண்டு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
