கஜேந்திரகுமார் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசின் மற்றுமொரு கோர முகம்!சீமான் கடும் கண்டனம்

Gajendrakumar Ponnambalam Sri Lanka Sri Lankan political crisis
By Dhayani Jun 03, 2023 08:25 PM GMT
Report

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான அன்புச்சகோதரர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைச் சுட்டுப் படுகொலை செய்வதற்கு இலங்கை புலனாய்வுத்துறையினர் முயன்றுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கின்றது.

கஜேந்திரகுமார் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசின் மற்றுமொரு கோர முகம்!சீமான் கடும் கண்டனம் | Attack On Gajendrakumar Seeman

ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை

சமகால அரசியல் சூழலில் ஈழத்தமிழ் மக்களுக்கு இலங்கை அரசால் இழைக்கப்படும் இனவெறிக் கொடுமைகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களது அடிப்படை உரிமைகளுக்கு ஆதரவாகவும்இ வலுவான குரல் கொடுத்து அரசியல் தளத்தில் போராடிவரும் சகோதரர் கஜேந்திரகுமார் மீதான இக்கொடுந்தாக்குதல் இலங்கை இனவாத அரசின் கோழைத்தனத்தையும்இ கோரமுகத்தையுமே மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது.

நெஞ்சில் தீரத்துடனும் நேர்மை அறத்துடனும் சமரசமின்றி தமிழீழ விடுதலைக் குரலாக இலங்கை நாடாளுமன்றத்திலேயே ஓங்கி ஒலித்தவரும் தேசியத்தலைவரால் மாமனிதர் என்று போற்றப்பட்டவருமான ஐயா குமார் பொன்னம்பலம் அவர்களைக் கடந்த 2000 ஆம் ஆண்டில் அரசக் கைக்கூலிகள் மூலம் சுட்டுப்படுகொலை செய்தது இலங்கை இனவெறி அரசு.

கஜேந்திரகுமார் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசின் மற்றுமொரு கோர முகம்!சீமான் கடும் கண்டனம் | Attack On Gajendrakumar Seeman

தற்போது தந்தையைப் போலவே சமரசமற்ற அரசியல் தலைவராகத் திகழ்கின்ற அவரது மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இருப்பையும் திரைமறைவில் அழித்தொழிக்கும் இலங்கை இனவெறி அரசின் சதிச்செயலே இக்கொலைமுயற்சி நிகழ்வாகும்.

ஈழத்தில் ஆயுதமேந்திய விடுதலைப்போராட்டம் முடிவுக்கு வந்து 14 ஆண்டுகளைக் கடந்தும் இனப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு இலட்சம் மக்களுக்கான நீதியைப் பன்னாட்டு நீதிமன்றத்தில் இன்னமும் பெறமுடியாமலும் இலங்கை இனவாத அரசால் வலிந்து காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்த தகவல்களை அவர்களது குடும்பத்தினருக்கு இன்றுவரை பெற்றுத்தரமுடியாமலும் கடுந்துயரத்தோடும் காயம் சுமந்த கண்ணீரோடும் கையறு நிலையில் ஈழத்தில் தமிழினம் தவித்துவரும் நிலையிலும் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவெறி அடக்குமுறைகள் இன்னும் நின்றபாடில்லை என்பதை இக்கொடுந்தாக்குதலின் மூலமாவது பன்னாட்டுச்சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கடும் பொருளாதாரப் பின்னடைவு

இலங்கையில் கடும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டு தமிழ் மக்கள் மட்டுமின்றி சிங்கள மக்களும் பசியும்இ பட்டினியுமாக வாழ வழியற்று நிற்கும் நிலையிலும் அணுவளவு உரிமையும் தமிழர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளார்கள் என்பதை உலக வல்லாதிக்க நாடுகள் இப்போதாவது அறிந்துகொள்ள வேண்டும்.

இலங்கையில் எத்தனை ஆட்சி மாறினாலும் எத்தனை சிங்கள ஆட்சியாளர்கள் மாறினாலும் அவர்கள் எத்தனை நல்லெண்ண நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறினாலும் அவை ஒருபோதும் தமிழர் நலனுக்கு ஒரு சிறிதும் உதவப்போவதில்லை என்பதையும், தமிழரது உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் சிங்களர்களது இனவெறி மனப்பான்மை மாறப்போவதில்லை என்பதையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக ஈழத்தமிழ் மக்களின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்கத் துணைநின்ற உலக நாடுகள் இனியாவது உணரத் தளைப்பட வேண்டும்.

கஜேந்திரகுமார் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசின் மற்றுமொரு கோர முகம்!சீமான் கடும் கண்டனம் | Attack On Gajendrakumar Seeman

ஈழ மக்களின் கோரிக்கை

தங்கள் உரிமைக்காக அறவழியில் போராடிய ஒற்றைக் காரணத்திற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையே படுகொலை செய்ய முயலுமென்றால் ஈழத்தில் வாழ்கின்ற பாமர மக்கள் என்ன உரிமையைக் கோரி இலங்கை இனவெறி அரசிடம் பெற்றுவிட முடியும் என்பதை இந்தியா உட்பட உலக நாடுகள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால் தனித்தமிழீழம் மட்டுமே அம்மக்களுக்கான நிரந்த தீர்வாக இருக்க முடியும் என்பதை உணர முடியும்.

ஆகவே இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான அன்புச்சகோதரர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மீதான இலங்கை இனவாத அரசின் புலனாய்வுத் துறையினர் நடத்தியுள்ள கொலை முயற்சி தாக்குதலுக்கு இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தனது கண்டனத்தைத் தெரிவித்து அவருக்கு உரிய பாதுகாப்புகள் வழங்கிடவும் இலங்கை அரசினை எச்சரித்து வலியுறுத்திட வேண்டும்.

ஈழத்தமிழர்கள் தனித்தமிழீழம் எனும் உண்மையான அரசியல் உரிமையைப் பெற்றிட கனடா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may like this 


7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US