புத்தாண்டு காலத்தில் சூரியனின் இயக்கத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
புத்தாண்டு காலத்தில் சூரியனின் இயக்கம் காரணமாக பல பகுதிகளில் வெப்பமாக இருக்கும் அதேநேரம் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனின் இயக்கம்
இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து புத்தாண்டு(14.04.2025) வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இந்நிலையில் சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க இன்று (12) நண்பகல் 12.11 அளவில் ஆடியகுளம், வேப்பங்குளம், பதவிய மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதேவேளை மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 11 மணி நேரம் முன்
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri