உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது
பொலிஸ் தலைமையகத்தின் பயிலுநர்களை இணைத்துக்கொள்ளும் பிரிவின் (ஆட்சேர்ப்புப் பிரிவு) உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருநாகல், தோரயாயவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
2007 ஆம் ஆண்டு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பரீட்சைக்காக போலியான தகவல்களுடன் கூடிய விண்ணப்பப் படிவத்தையும், போலியாகத் தயாரிக்கப்பட்ட பணக் கொடுப்பனவு பற்றுச்சீட்டையும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தமை தொடர்பிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
