தொடரிலிருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி! 'சூப்பர் 4' சுற்றுக்கு இலங்கை அணி தகுதி
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கெதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது. நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஹ்மதுல்லா குர்பாஸ், செதிக்குல்லா அடல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆப்கானிஸ்தான் அணி
79 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் திணறியது. முகமது நபி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகே வீச ஓவரின் முதல் 5 பந்துகளையும் சிக்சர் அடித்தார். 4ஆவது சிக்ஸ் அடிக்கும்போது 20 பந்தில் அரைசதம் அடித்தார்.
கடைசி பந்தில் 2 ஓட்டங்களுக்கு ஓடும்போது முகமது நபி ஆட்டமிழந்தார்.
அவர் 22 பந்தில் 60 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் குவித்தது.
இலங்கை அணி
170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
170 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி, 8 பந்துகள் மீதமிருக்க, இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
குசல் மெண்டிஸ் 74 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம், இலங்கை மற்றும் பங்களாதேஸ் ஆகிய இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த தோல்வியின் மூலம், ஆப்கானிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த தொடரில் குரூப் A இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவில்குரூப் B பிரிவில் இலங்கை, பங்களாதேஸ் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இதற்கிடையே இன்று (19) ஓமன் அணியுடன் குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா மோதுகின்றது.





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
