கந்தளாய் தள வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா திடீர் விஜயம்
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா, கந்தளாய் தள வைத்தியசாலைக்கு நேற்று (9) மாலை திடீர் விஜயம் மேற்கொண்டார்.
வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரடியாகக் கண்டறிவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த விஜயத்தின்போது, கந்தளாய் தள வைத்தியசாலையின் மருந்துப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கான முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
மருந்துத் தட்டுப்பாடு
அடுத்த ஆண்டுக்குத் தேவையான மருந்துகளை இந்த ஆண்டிலேயே இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மருந்துத் தட்டுப்பாட்டை முன்கூட்டியே தவிர்த்து, நோயாளிகளுக்குத் தடையற்ற மருந்து விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், சுகாதாரத் துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அருண் ஹேமச்சந்திரா உறுதியளித்தார்.
மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை
குறிப்பாக மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் ஏனைய மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை சுகாதார சேவைகளில் பெரும் சவாலாக இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படுவதன் மூலம் சுகாதார சேவைகளின் தரம் மேம்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விஜயத்தின்போது கந்தளாய் தள வைத்தியசாலை அத்தியட்சகர் உதார குணத்திலக்க மற்றும் வைத்திய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
