அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்?

Sri Lankan Tamils P Ariyanethran Sri Lanka Presidential Election 2024
By Nillanthan Sep 08, 2024 09:17 AM GMT
Report

ஒரு நண்பர் பகிடியாகச் சொன்னார், “சுமந்திரன் நம்பியாராக மாறி அரியநேத்திரனை எம்ஜிஆர் ஆக்கிவிட்டார், இனி நடக்கப் போவது எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் இடையிலான சண்டை.

தமிழ் கூட்டு உளவியல் என்பது கதாநாயகன் - வில்லன் என்ற துருவ நிலைப்பட்ட மோதலை ரசிப்பது. நமது புராணங்களில் இருந்து திரைப்படங்கள் வரையிலும் அப்படித்தான் காணப்படுகின்றன.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியை, தமிழ்க் கூட்டு உணர்வுக்கு மாறாக சஜித்தை நோக்கி திருப்பியதனால் சுமந்திரன் இப்பொழுது வில்லனாக காட்டப்படுவார். அவர் வில்லனாகவும் அரியநேத்திரன் கதாநாயகனாகவும் காட்சிப்படுத்தப்படும் பொழுது அங்கே ஒரு திரைப்படம் ஓடும். அது தமிழ் பொது உளவியலைக் கவரும்.

இனி தமிழ்ப் பொது வேட்பாளருக்கான பிரசாரம் தன்பாட்டில் நடக்கும். கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையிலான மோதல். அது அரியநேத்திரனை நோக்கி அதிகம் வாக்குகளை ஈர்க்கும்” என்று.

 பொது வேட்பாளர்  

ஆனால் அரியநேத்திரனை ஒரு பொது வேட்பாளராக முன்னிறுத்திய பொதுகட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மக்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்” தமிழ் மக்களைத் திரட்டுவது அல்லது ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் மக்களை ஒன்றிணைப்பது அல்லது தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது ஒரு நபருக்கு எதிராகவோ ஒரு கட்சிக்கு எதிராகவோ செய்யப்படும் விடயம் அல்ல என்று.

அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்? | Article About General Candidate Ariyanethran 2024

ஒரு நபருக்கு எதிராகவோ ஒரு கட்சிக்கு எதிராகவோ தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது. தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது ஆக்கபூர்வமானது. அது எதிர்மறையானது அல்ல. இந்த இடத்தில் வில்லர்களை முன்வைத்து அவர்களுக்கு எதிராக ஒரு மக்கள் கூட்டத்தை கட்டமைப்பது நிரந்தரமானது அல்ல. சரியானதுமல்ல” என்பது, தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள் அங்கம் வகிக்கும் கருத்துருவாக்கிகளின் நிலைப்பாடாகும்.

ஆனால், தேர்தல்களத்தில் அந்த நிலைப்பாட்டிற்கு மாறாக கதாநாயகன் - வில்லன் என்று துருவ நிலைப்படத் தொடங்கி விட்டது. அதாவது தமிழ்ப் பொது உளவியலின் பொதுவான வாய்ப்பாட்டுக்குள் அது விழத் தொடங்கிவிட்டது. இதனால் அரியநேத்திரனை நோக்கி குவியும் வாக்குகளின் தொகை அதிகரிக்கலாம்.

அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்? | Article About General Candidate Ariyanethran 2024

தமிழரசுக் கட்சியில் உள்ள சுமந்திரன் அணியின் இந்த முடிவு ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டது. அதில் புதிதாக ஒன்றும் இல்லை. ஏற்கனவே கட்சியின் இரண்டு மாவட்டக் கிளைகள் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டை உறுதியாக எடுத்திருந்த ஒரு பின்னணியில், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித்தை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கின்றது.

கட்சியின் மூத்த உறுப்பினராகிய சிவஞானம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. சஜித்தை ஆதரிப்பது மக்களுடைய கூட்டுணர்வுக்கு எதிரானது என்பது அவருக்கு தெரிகிறது. இது கட்சித் தொண்டர்களுக்கும் தெரிகிறது.

கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல, அரசியலை கணிதமாக, விஞ்ஞானமாக அணுகும் யாருக்கும் அது தெளிவாகத் தெரியும். சஜித்திடம் 13ஐத் தவிர வேறு எதுவும் இல்லை.

13ஆவது திருத்தம் 

சமஸ்டி கட்சி ஆதரவாளர்கள் 13ஆவது திருத்தத்தை ஒரு வாக்குறுதியாக ஏற்றுக் கொள்ள தயாரா? 13 ஒரு புதிய தீர்வு அல்ல. ஏற்கனவே யாப்பில் இருப்பது. அப்படிப் பார்த்தால் யாப்பை நிறைவேற்றுவேன் என்று கூறும் ஒரு வேட்பாளருக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி கேட்கின்றதா?

அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்? | Article About General Candidate Ariyanethran 2024

இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால், ஒரு நாட்டின் அதி உயர் சட்ட ஆவணமாகிய யாப்பை நிறைவேற்றுவது தான் அந்நாட்டின் தலைவர்களுடையதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். இலங்கை, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையைக் கொண்டது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எட்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகள் பதவியில் இருந்திருக்கிறார்கள்.

இவர்களில் யாருமே யாப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை என்பது எதனைக் காட்டுகிறது? நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகள் இலங்கைத் தீவின் யாப்பை மீறி ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பதை காட்டுகின்றது.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக யாப்பை மீறும் ஒரு பாரம்பரியத்தை கொண்ட ஒரு நாட்டில் இப்பொழுது ஒரு தலைவர் யாப்பை நடைமுறைபடுத்துவேன் என்று கூறுகிறாராம் அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமாம்.

சுமந்திரன் அணியின் இந்த முடிவு தமிழரசு கட்சிக்குள் மேலும் பிளவுகளை அதிகப்படுத்துமா? பொது வேட்பாளர் விடயம் தமிழரசு கட்சிக்குள் ஏற்கனவே காணப்படும் தலைமைத்துவ போட்டியை மேலும் ஆழப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான அலையொன்று எழத் தொடங்கியிருக்கும் ஒரு பின்னணியில், சுமந்திரன் அணியின் முடிவு வந்திருக்கிறது.

வாக்களிப்பு அலை 

இலங்கை போன்ற நாடுகளில் தேர்தலுக்கு முதல் வாரம் அல்லது சில நாட்களுக்கு முன்னர்தான் வாக்களிப்பு அலை தோன்றும். தமிழ்த் தேசிய அரசியலுக்கும் இது பொருந்தும். தமிழ் நடுத்தர வர்க்கத்தில் ஆங்கிலம் தெரிந்த ஒரு பகுதியினர் ரணில் மீதும் ஆர்வமாக காணப்படுகிறார்கள்.

மாற்றத்தை விரும்பும் மற்றொரு பிரிவினர் அநுர மீதும் ஆர்வமாக காணப்படுகிறார்கள். இப்பொழுது தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணியானது சஜித்தை ஆதரிக்குமாறு கேட்டு இருக்கிறது.

அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்? | Article About General Candidate Ariyanethran 2024

அதனால், தமிழ் வாக்காளர்கள் நான்கு முனைகளில் சிதறடிக்கப்படுவார்களா? அவ்வாறு தமிழ் வாக்காளர்கள் சிதறடிக்கப்படக்கூடாது என்று முடிவெடுத்துத்தான் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

தமிழ் மக்களைக் கோர்த்துக்கட்டுவது, கூட்டிக்கட்டுவது தான் என்று பொது வேட்பாளரை ஆதரிக்கும் தரப்பு தொடர்ச்சியாக கூறி வருகின்றது. ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முதன்மைக் காரணம் தமிழ் மக்களை ஒன்றிணைப்பது. தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பது. தமிழ்க் கூட்டு உளவியலை பலப்படுத்துவது என்று அவர்கள் கூறி வருகிறார்கள். அதாவது, அவர்கள் தமிழ் வாக்காளர்களைத் திரட்ட முயற்சிக்கிறார்கள்.

இருப்பினும், சுமந்திரனும் அவருடைய அணியும் தமிழ் வாக்காளர்களைச் சிதறடிக்கலாம் என்று நம்புகிறார்கள். உள்ளதில் பெரிய கட்சி என்ற அடிப்படையில் தாங்கள் எடுத்த முடிவை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்று அவர்கள் நம்பக் கூடும்.

ஜி.ஜி பொன்னம்பலம் மகாதேவா

ஆனால், தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு முடிவெடுத்த தருணங்களில் கட்சியையோ சின்னத்தையோ தலைவர்களையோ பொருட்படுத்தவில்லை என்பதற்கு கடந்த நூற்றாண்டு முழுவதிலும் உதாரணங்கள் உள்ளன. கடந்த நூற்றாண்டில், ஜி.ஜி பொன்னம்பலம் மகாதேவாவை தோற்கடித்தார்.

அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்? | Article About General Candidate Ariyanethran 2024

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று கூறித் தோற்கடித்தார். இராமநாதன் குடும்பத்தில் வந்த உயர் குழாத்தைச் சேர்ந்த மகாதேவாவை ஜி.ஜி தோற்கடித்தார். செல்வநாயகம் ஜி.ஜியை இலட்சியத்தின் பெயரால் தோற்கடித்தார்.

அதன் பின் தமிழ் ஐக்கியத்தின் பெயரால், கொள்கைக்காக, தமிழர் விடுதலைக் கூடடணியின் உதய சூரியன் சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிக் கொடுத்தார்கள். அதன் பின் இந்திய அமைதி காக்கும் படை நாட்டில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில், நடந்த பொதுத் தேர்தலில், முன்பின் அறிமுகம் இல்லாத சுயேட்சை சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.

உதய சூரியனைப் பின்னுக்குத் தள்ளினார்கள். வேட்பாளர்களின் முகமே தெரியாத ஒரு போர் சூழலில், தமிழ் மக்கள் ஒன்று திரண்டு வெளிச்ச வீட்டு சின்னத்துக்கு வாக்களித்து, 13 ஆசனங்களை ஈரோஸ் இயக்கத்துக்கு கொடுத்தார்கள்.

அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்? | Article About General Candidate Ariyanethran 2024

தேர்தலில் ஈரோஸ் இயக்கத்தின் பிரமுகராகிய பராவை இந்திய அமைதி காக்கும் படை கைது செய்து முகாமில் அடைத்து வைத்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பொழுது கைதியாக இருந்த பராவை “நீங்கள் இப்பொழுது எம்.பி ஆகிவிட்டீர்கள் வெளியே போகலாம்”என்று கூறி அனுப்பி விட்டார்கள்.

அத்தேர்தலுக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதயமாகிய பொழுது உதயசூரியன் சின்னத்தை தமிழ் மக்கள் தோற்கடித்தார்கள். உதய சூரியன் சின்னமானது ஒரு காலம் வெற்றியின் சின்னமாக இருந்தது. ஐக்கியத்தின் சின்னமாக இருந்தது.

அப்படிபட்ட உதயசூரியன் சின்னத்தை தோற்கடித்த ஒரு மக்கள் கூட்டம், முகம் தெரியாத வேட்பாளர்களுக்கு வாக்களித்து சுயேட்சையை வெல்ல வைத்த ஒரு மக்கள் கூட்டம், கூட்டுணர்வோடு முடிவெடுக்கும் பொழுது, சின்னமும் கட்சியும் ஒரு பொருட்டே அல்ல.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 08 September, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

செட்டிக்குளம், Toronto, Canada

14 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை தெற்கு, டோட்மண்ட், Germany

15 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், யாழ்ப்பாணம், பூவரசங்குளம், வவுனியா

16 Aug, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், அளவெட்டி

13 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Markham, Canada

16 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Kirchheim Unter Teck, Germany

16 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சுன்னாகம், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, Vaughan, Canada

10 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US