அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் ட்ரோன் கமெராவை பறக்கவிட்ட வெளிநாட்டவர் கைது!
ஸ்ரீ தலதா மாளிகைக்கு சொந்தமான அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் ட்ரோன் கெமராவை பறக்கவிட்ட சந்தேகத்தின் பேரில் பங்களாதேஷ் பிரஜை ஒருவர் தலதா மாளிகை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தான் நடத்தும் யூடியூப் சேனலுக்கு உரிய காட்சிகளைப் பெற்றதாக பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
ஸ்ரீ தலதா மாளிகைக்கு கோவிலுக்கு சொந்தமான அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி ட்ரோன் கமெராக்களை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ட்ரோன் கெமரா பொருத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி, கெமரா மற்றும் சந்தேகநபரின் கடவுச்சீட்டு என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் சுற்றுலா பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இத்தமல்கொட தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
