50 லட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணும் ஆணும் கைது
தலங்கமை ஹினடிகும்புர பிரதேசத்தில் 50 லட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை காரில் கடத்திச் சென்ற பெண் மற்றும் ஆண் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 500 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஹெரோயின் போதைப் பொருள் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல்காறரான , தற்போது துபாய் நாட்டில் தலைமறைவாக இருக்கும் களு சாகர என்ற நபருடன் இருக்கும் பெண்ணுக்குச் சொந்தமானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள், நோனாகம மற்றும் அம்பலாங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்த 30 மற்றும் 33 வயதான நபர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri