முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு உத்தரவு
மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம தாக்குதலுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபரால் பெயரிடப்பட்ட 22 பேரில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, மிலன் ஜயதிலக்க, மொரட்டுவ மேயர் சமன் லால் பெர்னாண்டோ, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே, டான் பிரியசாத் ஆகியோரும் சட்டமா அதிபரினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
May you like this Video





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
